அம்பாசமுத்திரத்தில் கால்வாய்களில் தண்ணீர் திறக்கக்கோரி அனைத்து கட்சியினர் சாலை மறியல்

அம்பாசமுத்திரத்தில் கால்வாய்களில் தண்ணீர் திறக்கக்கோரி அனைத்து கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 252 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர். சாலை மறியல் அம்பாசமுத்திரம் பகுதியில் விவசாய பணிகளுக்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடக்

Update: 2017-08-01 21:00 GMT

அம்பை,

அம்பாசமுத்திரத்தில் கால்வாய்களில் தண்ணீர் திறக்கக்கோரி அனைத்து கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 252 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.

சாலை மறியல்

அம்பாசமுத்திரம் பகுதியில் விவசாய பணிகளுக்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடக்கோரி அனைத்து கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்பை பூக்கடை பஜார் முன்பு நடந்த இந்த போராட்டத்துக்கு, நகர தி.மு.க. செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவகுமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிவகுருநாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் கசமுத்து, தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், நகர ம.தி.மு.க. செயலாளர் முத்துசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வேலுமயில், நகர வியாபாரிகள் சங்க கவுரவ தலைவர் ரசூல் முகம்மது, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் உயர் மட்ட குழு உறுப்பினர் அச்சுதன், த.மா.கா.வை சேர்ந்த அந்தோணிசாமி உள்ளிட்டோர் போராட்டம் குறித்து விளக்கி பேசினார்கள்.

252 பேர் கைது

போராட்டத்தில் தி.மு.க. மாநில தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் லட்சுமணன் யாதவ் மற்றும் 5 பெண்கள் உள்பட 252 பேர் கலந்துகொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் ஊர்வலமாக திருமண மண்டபத்துக்கு சென்றனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை முன்னாள் சட்டப் பேரவை தலைவர் ஆவுடையப்பன் சந்தித்து வாழ்த்து கூறி, விவசாயிகளின் கோரிக்கை குறித்து கலெக்டரிடம் தொலைபேசியில் பேசினார்.

மேலும் செய்திகள்