ராமநாதபுரத்தில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வினை உடனடியாக தமிழகத்திலும் அமல்படுத்தக்கோரி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2017-08-01 22:00 GMT

ராமநாதபுரம்,

நீட் தேர்வினை உடனடியாக தமிழகத்திலும் அமல்படுத்தக்கோரி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி ராமநாதபுரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் வினோத், மாவட்ட இணை செயலாளர் அஜீஸ்பாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் நீட்தேர்வினை உடனடியாக அமல்படுத்த வேண்டும், இதுதொடர்பாக நீட்தேர்வினை விலக்கக்கோரி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவந்தால் அதனை மத்திய அரசு ஏற்கக்கூடாது, மருத்துவ படிப்பின் தரத்தினை உயர்த்த வேண்டும் என்றால் தமிழக மாணவர்களுக்கு நீட்தேர்வு மிகவும் அவசியம் என்று வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

மேலும் செய்திகள்