மேட்டூர் அணை நீர்மட்டம் 34 அடியாக உயர்வு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2,500 கனஅடியாக அதிகரிப்பு
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 34 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நேற்று இரவு முதல் வினாடிக்கு 2,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்,
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக அங்குள்ள அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து மேட்டூர் அணையை வந்தடைகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த மாதம் 8-ந் தேதி முதல் நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வருகிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த சூழலில் குடிநீருக்கான தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால் நேற்று இரவு முதல் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியில் இருந்து 2,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அணைக்கு நீர்வரத்தானது தண்ணீர் திறப்பை விட அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாள்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது.
சராசரியாக நாள்ஒன்றுக்கு ஒரு அடி வீதம் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 33.30 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 34.60 அடியாக உயர்ந்தது. இதனிடையே, நேற்று முன்தினம் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதையடுத்து அணைக்கு நேற்று முன்தினம் காலையில் 7,017 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் 7,271 கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.