மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் சாவு தொடரும் உயிர்பலியால் பொதுமக்கள் அச்சம்
சேலம் சின்னக்கொல்லப்பட்டியில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் உயிரிழந்தான். தொடரும் உயிர் பலியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கன்னங்குறிச்சி,
சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தபட்டு வருகிறது. மேலும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் டெங்கு காய்ச்சல்தான் என உறுதிப்படுத்த முடியாத நிலையில் சிறுவர்-சிறுமிகள் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி வருவது தொடர்கிறது. இதனால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி, தாரமங்கலம், பனமரத்துப்பட்டி, ஓமலூர் பகுதியில் குண்டுக்கல், பூசாரிப்பட்டி, கருப்பணம்பட்டி, சேலம் உள்ளிட்ட பகுதியில் மர்ம காய்ச்சல் பாதிப்புக்கு 7 சிறுவர், சிறுமிகள் பலியாகி உள்ளனர். நேற்று முன்தினம் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த மெஹராஜ் பானு என்ற இளம்பெண், குழந்தை பிரசவித்த சிலமணி நேரத்தில் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தார்.
இந்த நிலையில் நேற்று சேலம்-ஏற்காடு அடிவாரம் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள சின்னக்கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி செல்வமணி-உமா தம்பதியின் 3-ம் வகுப்பு படித்த 8 வயது மகன் தருண் மர்ம காய்ச்சலுக்கு பலியானான். ஏற்கனவே மர்ம காய்ச்சலினால் உமா பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில் அவரது மகன் தருண் மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளான்.
கடந்த வாரம் தருணுக்கு காய்ச்சல் ஏற்பட்டு அவதியடைந்தான். அதைத்தொடர்ந்து பெற்றோர், சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஒருவாரமாக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை தருண் உயிரிழந்தான். அதைத்தொடர்ந்து அவனது உறவினர்களும், பொதுமக்களும் வீட்டு முன்பு திரண்டனர்.
இதுகுறித்து சின்னக்கொல்லப்பட்டி பகுதி மக்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் சாக்கடை கழிவுநீர் செல்ல முடியாதபடி உள்ளதால் சுகாதாரமற்ற நிலை நிலவுகிறது. இதனால், கொசுத்தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் கொடுத்தும் அலட்சியமாக உள்ளனர்” என்றனர்
இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சல் பாதிப்புக்கு பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக டீன் கனகராஜ் கூறுகையில், “சேலம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது டெங்கு காய்ச்சல் அல்ல. ஆனால், தொடர் காய்ச்சல் இருந்து வருகிறது. வைரஸ் காய்ச்சல் உள்ளிட்டவைகளால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண காய்ச்சல் உள்ளவர்கள் உடனடியாக வீடு திரும்பி விடுகிறார்கள். தொடர் காய்ச்சல் உள்ளவர்களுக்கு ரத்த மாதிரி சோதனைக்காக எடுக்கப் பட்டுள்ளது” என்றார்.