பாலியல் வன்முறை: வலியுடன் வாடும் வாழ்க்கை
பாலியல் பலாத்காரம் என்பது உலகெங்கிலும் பரவலாக பேசப்படும் விஷயம். இதை பற்றி பேசும்போது பலரும் ‘இது பெண்களுக்கு மட்டுமே நடக்கும் கொடுமை’ என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
பாலியல் பலாத்காரம் என்பது உலகெங்கிலும் பரவலாக பேசப்படும் விஷயம். இதை பற்றி பேசும்போது பலரும் ‘இது பெண்களுக்கு மட்டுமே நடக்கும் கொடுமை’ என்று நினைத்துக்கொள்கிறார்கள். அப்படியல்ல! ஆண்களும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.
ராகவன் சில நாட்களாகவே மகன் ரோகித்தை கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்தார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் எப்போதும் கலகலப்பாக இருக்கக்கூடிய கல்லூரி மாணவன். திடீரென்று அவனுக்கு என்ன நேர்ந்ததென்று அவருக்கு புரியவில்லை. எப்போதும் தனிமையில் எதையோ பறி கொடுத்தைப்போல சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தான்.
அதைத் தொடர்ந்து எல்லா பாடங்களிலும் தோல்வியடைந்தான். ஏதோ விபரீதம் அவனுக்குள் நிகழ்ந்திருப்பது புரிந்தது. படிப்பில் அவன் கெட்டிக்காரன். கடினமான பாடங்களைகூட புரிந்துகொண்டு நூற்றுக்கு நூறு வாங்கி விடுவான். இப்போது அவனுக்கு என்னவாயிற்று என்று குழப்பமடைந்தார் ராகவன். ஒருவேளை ஏதாவது காதல் விவகாரமாக இருக்கலாமோ என்று யோசித்தார். அவனுக்குத் தெரியாமல் அவனது நண்பர்களிடம் விசாரித்ததில் அப்படி எதுவுமில்லை என்பது புரிந்தது. வேறு என்ன காரணம் என்பதை கண்டறிய அவனை மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்றார். அப்போதுதான் அந்த பயங்கரம் வெளிப்பட்டது.
இரண்டு வெளிநாட்டு மாணவிகள் சேர்ந்து அவனை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதோடு நிற்காமல் ‘வெளியே தெரிந்தால் அவ்வளவுதான் உன்னை உயிரோடு விடமாட்டோம்’ என்று மிரட்டவும் செய்திருக்கிறார்கள். என்ன செய்வதென்று புரியாமல் குழம்பித் தவித்திருக்கிறான் ரோகித்.
உண்மை தெரிந்ததும் கல்லூரியே தக்க நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்குரிய அந்த வெளிநாட்டு மாணவிகளை வெளியேற்றியது. இதுபோல இன்னும் சில சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
கல்லூரி பேராசிரியை ஒருவரே தவறாக நடக்க முயற்சித்திருக்கிறார். அந்த இளைஞன் தப்பித்து வந்து மற்ற மாணவர்களிடம் விஷயத்தை தெரிவித்தான். கல்லூரி நிர்வாகம் அந்தப் பெண்மணியை அழைத்து ‘நீங்களாகவே வேலையை விட்டு விலகிக் கொள்ளுங்கள். நீங்கள் பெண் என்பதால் உங்கள் எதிர்காலம் கருதி நாங்கள் விஷயத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை’ என்று கேட்டுக் கொண்டதின் பேரில் அவரே வேலையை ராஜினாமா செய்து விட்டுச் சென்று விட்டார்.
இதுபோல பாதிக்கப்பட்ட பல ஆண்கள் இருக்கிறார்கள். பாலியல் பலாத்காரம் என்பது ஆணுக்கு நடந்தாலும், பெண்ணுக்கு நடந்தாலும் அது மிகவும் கொடூரமானது. மனநிலையை பாதிக்க வைப்பது. அந்த பாதிப்பை விட்டு வெளியே வர பல நாட்களாகும். பலாத்காரத்தை பெண்களால் மறைக்க முடியாது. உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படும். ஆண்களுக்கு அப்படி எந்த மாற்றமும் ஏற்படாது. ஆனாலும் மனதளவில் கடும் பாதிப்பிற்குள்ளாவார்கள்.
ஒரு பணக்கார பெண்மணி தன் வீட்டில் வேலை செய்யும் இளைஞனிடம் தவறாக நடந்து கொண்டார். விஷயம் வெளியே தெரிந்ததும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து அந்த இளைஞன் மீது பழியை போட்டு விட்டார். அனைவராலும் அடித்து உதைத்து விரட்டப்பட்ட அந்த இளைஞன் மனநிலை சரியில்லாமல் வீதியில் அலையும் நிலை உருவானது.
சரித்திர காலத்தில் அடிமைகளாக வேலைப் பார்த்த பல இளைஞர்கள் இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். விஷயம் வெளியே கசிந்தால், அந்த ஆணை கொலை செய்து விடுவார்கள்.
பாதிக்கப்பட்ட ஆண்கள் பெரும்பாலும் அவமானத்தில் கூனிக்குறுகிப் போகிறார்கள். வெளியே சொன்னாலும் யாரும் நம்புவதில்லை. ஆறுதல் சொல்லாமல் கேலியும், கிண்டலும் செய்வார்கள். அதனால் பயந்துபோய் பாதிக்கப்பட்ட ஆண்கள் போலீசிலும் புகார் கொடுப்பதில்லை.
ஹர்ஷத்தின் உறவுக்கார பெண்மணி அவனிடம் தவறாக நடந்துகொண்டதை அவனால் வெளியே சொல்ல முடியவில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தன. சிலந்தி வலைபோல மாட்டிக்கொண்ட அந்த இளைஞனின் குடும்ப வாழ்க்கையும் இதனால் பாதிக்கப்பட்டது. மனைவியும் அவனை விட்டுப் பிரிந்தாள். உறவினர்கள் முன்னால் அவனுக்கு அவமானம் ஏற்பட்டது. ஆனால் அதை பற்றி கவலைப்படாமல் அந்தப் பெண் அவனை வசப்படுத்தி வைத்திருந்தாள். அவனது நிலைமை தெரிந்த அவனுடைய நண்பன் தந்திரமாக அந்தப் பெண்மணியை சிக்க வைத்து, பயமுறுத்தி அவனை, அவளிடமிருந்து மீட்டு குடும்பத்துடன் சேர்த்து வைத்தான்.
‘நீ என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தாய் என்று வெளியே சொல்லி விடுவேன்’ என்ற மிரட்டலுக்கு பல அப்பாவிகள் பயந்து போகிறார்கள். இதுபோன்ற சமயங்களில் பெண்களின் மிரட்டலுக்கு பயந்து விடக்கூடாது. நம்பிக்கையான யாரிடமாவது விஷயத்தை சொல்லவேண்டும். தப்பிக்க வழிதேட வேண்டும். அதை விட்டுவிட்டு சோர்ந்து போய் உட்கார்ந்து விடக்கூடாது. தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள புத்திசாலித்தனமாக போராட வேண்டும். நம்மிடம் நியாயம் இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். இதுபோன்ற சமூக குற்றங்களை செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும்.
வெளிமாநிலங்களிலிருந்து வேலைதேடி வரும் பலருக்கு இதுபோன்ற கொடுமையான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை மாட்டிக் கொண்டால் தண்டனையும் அவர்களுக்குதான். ஏனென்றால் பாலியல் தொல்லை என்றால் இந்த கோணத்தில் யாரும் சிந்திக்க மாட்டார்கள். நிரூபிக்கவும் வழிஇல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலை பாதிக்கப்பட்டவரை மன நோயாளியாக்கிவிடும் அபாயம் உள்ளது. சமூகம் இதில் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.