ராயப்பேட்டையில் பள்ளியின் அருகே ஆபத்தான மின் பெட்டி
சென்னை ராயப்பேட்டையில் பள்ளியின் அருகே மின் பெட்டி பின்பக்க கதவுகள் திறந்து, வயர்கள் அனைத்தும் வெளியே தெரியும் வகையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
சென்னை,
சென்னை ராயப்பேட்டை மீர் பக்ஷி அலி தெருவில் ‘ஏ.எஸ்.சலாம்’ சர்வதேச பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகே மின்சார பெட்டி ஒன்று உள்ளது. அதன் பின்பக்க கதவுகள் திறந்து, வயர்கள் அனைத்தும் வெளியே தெரியும் வகையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. பள்ளிக்கும் செல்லும் மாணவர்கள் அந்த மின் பெட்டியை கடந்து செல்லவேண்டிய சூழல் உள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கும் ஆபத்து உள்ளது.
ஆகவே உயிருக்கு உலை வைப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள அந்த மின் பெட்டியை சரிசெய்யவேண்டும் என்று பள்ளி மாணவர்களின் பெற்றோர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.