தமிழ் ஆட்சி மொழித்திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு இலக்கிய இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு இலக்கிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை,
1956–ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ் ஆட்சி மொழித்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ் வழிக்கல்வி படித்தவர்களுக்கே தமிழ்நாட்டில் பணி வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இலக்கிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்க பொதுச்செயலாளர் க.ச.கலையரசன் தலைமை தாங்கினார். இதில் திருவள்ளுவர் ஞானமன்றம் செயம் கொண்டசோழபுரம் நிறுவனர் சி.பன்னீர்செல்வம், தமிழ் வழிக்கல்வி இயக்கத்தை சேர்ந்த சின்னப்பத்தமிழர் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.