கர்நாடகத்திற்கு தனி கொடியை உருவாக்குவதில் என்ன தவறு உள்ளது? மந்திரி யு.டி.காதர் கேள்வி
கர்நாடகத்திற்கு தனி கொடியை உருவாக்குவதால், நாட்டின் ஒற்றுமைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. நாம் தனியாக ஒரு கன்னட கீதத்தை பெற்றுள்ளோம்.
பெங்களூரு,
கர்நாடக உணவு மற்றும் பொதுவினியோகத்துறை மந்திரி யு.டி.காதர் பாகல்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
கர்நாடகத்திற்கு தனி கொடியை உருவாக்குவதால், நாட்டின் ஒற்றுமைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. நாம் தனியாக ஒரு கன்னட கீதத்தை பெற்றுள்ளோம். அப்படி இருக்கும்போது தனி கொடியை உருவாக்குவதில் என்ன தவறு இருக்கிறது?. இந்த கொடியை எதிர்ப்பவர்கள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
நாட்டின் ஒற்றுமை மற்றும் அமைதிக்கு காங்கிரஸ் எப்போதும் பாதிப்பை ஏற்படுத்தியது கிடையாது. ஏற்படுத்தவும் மாட்டோம். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சியினர் அரசை குறை கூறுவது கண்டிக்கத்தக்கது. நமது மாநிலத்தின் கொடிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு யு.டி.காதர் கூறினார்.