தலைமை ஆசிரியையிடம் 8 பவுன் தங்க சங்கிலி பறிப்பு நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் துணிகரம்

சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் தலைமை ஆசிரியையிடம் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு முகமூடி ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர்.

Update: 2017-07-22 00:30 GMT
சென்னை, 

நகையை பறிகொடுத்த தலைமை ஆசிரியையின் பெயர் நிர்மலா (வயது 47). இவர் சென்னை கோடம்பாக்கம் நாகார்ஜூனா நகர் 1-வது தெருவில் வசிக்கிறார்.

அந்த பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் பணியாற்றுகிறார். நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் செயல்படும் தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்துக்கு அதிகாரிகளை பார்ப் பதற்காக சென்றார்.

சங்கிலி பறிப்பு

டி.பி.ஐ. வளாகத்தில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு முகத்தில் கைக்குட்டையை முகமூடியாக கட்டிக் கொண்டு 2 மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அவர்கள் நிர்மலா கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். நிர்மலா கூச்சல் போட்டார். பொதுமக்கள் திரண்டு வந்தனர். ஆனால் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் முகமூடி ஆசாமிகள் தங்க சங்கிலியுடன் தப்பிச் சென்று விட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நிர்மலா நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். டி.பி.ஐ. வளாகத்திற்குள்ளேயே துணிச்சலாக புகுந்து தலைமை ஆசிரியை நிர்மலாவிடம் தங்க சங்கிலியை பறித்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்