ஹைட்ரோ கார்பன் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முன்வர வேண்டும்
ஹைட்ரோ கார்பன் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி பேசினார்.
அறந்தாங்கி,
100 நாட்களாக போராடியும் தீர்வு இல்லை என்றும், ஹைட்ரோ கார்பன் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொள்கை விளக்க மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கவிவர்மன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசிய தாவது:-
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையால் எந்த வேலையும் நடக்கவில்லை. ஜல்லிக்கட்டு பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, டாஸ்மாக் கடை பிரச்சினை, கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.பிரச்சினை என பிரச்சினைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நெடுவாசலில் 2-ம் கட்டமாக தொடர்ந்து 100 நாட்களாக பொதுமக்கள் போராடி வருகிறார்கள். இந்த பிரச்சினையை தீர்க்க மத்திய, மாநில அரசு அதிகாரிகளோ, மாவட்ட நிர்வாக அதிகாரிகளோ பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணாதது வேதனைக்குரியது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் ஊழலில் சிக்கி தவிக்கிறது என்ற கருத்தை நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு, ஆளும்கட்சி அமைச்சர்கள் அவருக்கு மிரட்டல் விடுவது போல பேசி வருவது கண்டனத்திற்குரியது. தமிழகம் உண்மையிலேயே ஊழலில்தான் சிக்கி தவிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.