சரக்கு வேன் மோதி சிறுமி பலி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு
குளித்தலை அருகே சரக்கு வேன் மோதி சிறுமி பலியானார். பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குளித்தலை,
குளித்தலை அருகே உள்ள வை.புதூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். கூலித்தொழிலாளியான இவருடைய மனைவி பிரேமா. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை இவர்களது 4-வது குழந்தையான நிஷா(வயது 3) சாலையோரம் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் இருந்து குளித்தலை வழியாக மணப்பாறை நோக்கி சென்ற சரக்கு வேன் சிறுமியின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி நிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இதை அறிந்த வை.புதூர் பகுதி பொதுமக்கள் வை.புதூரில் குளித்தலை- மணப்பாறை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமோகன் மற்றும் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டவரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், இச்சாலை வழியாக அதிகப்படியான வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகின்றன. மேலும் வாகனங்கள் வேகமாக செல்வதால் இப்பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகின்றனர். எனவே குளித்தலை- மணப்பாறை சாலையில் வை.புதூர் பகுதியில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குளித்தலை போலீசார் வேன் டிரைவரான திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அப்பநல்லூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் நேருஜி(24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சாலை மறியலால் குளித்தலை- மணப்பாறை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.