உலர் சாம்பல் ஏற்றி செல்லும் லாரி டிரைவர்கள் வேலைநிறுத்தம்
என்.எல்.சி.யில் இருந்து சிமெண்டு ஆலைகளுக்கு உலர் சாம்பலை ஏற்றி செல்லும் லாரி டிரைவர்கள் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி,
நெய்வேலி என்.எல்.சி.யில் உள்ள அனல் மின்நிலையங்களில் இருந்து உலர் சாம்பலை சிமெண்டு ஆலைகள், பிற தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சாம்பலை எடுத்து செல்வதற்காக நெய்வேலியில் இருந்து தினசரி 200-க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு செல்லும் லாரிகளில் விதிகளை மீறி அதிகளவில் உலர் சாம்பல் எடுத்து செல்லப்பட்டது. இதனால் அவ்வப்போது மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் ஆய்வு பணியில் இந்த லாரிகள் சிக்கி, அதன் டிரைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அபராதமும் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து இதுபோன்று சிக்கி வந்தால், சம்பந்தப்பட்ட டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், இதை தவிர்த்திடும் வகையில் அரசு நிர்ணயம் செய்த எடை அளவில் மட்டுமே உலர் சாம்பல்களை ஏற்றி செல்வது என்று லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் முடிவு செய்தனர். இதை நடைமுறை படுத்தும் வகையில் கடந்த 3-ந்தேதி முதல் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் இடையே ஒப்பந்தம் ஒன்றையும் ஏற்படுத்தி கொண்டனர்.
இந்த நிலையில் அரசு நிர்ணயித்த எடை அளவில் உலர் சாம்பல்களை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு எடைக்கு ஏற்ப வாடகையை ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகள் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இவர்களின் கோரிக்கையை 2 சிமெண்டு ஆலைகள் இதுவரையில் நிறைவேற்றவில்லை. இதனால் இந்த ஆலைகளுக்கு உலர் சாம்பலை ஏற்றி செல்லும் லாரி டிரைவர்கள் நேற்று முதல் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனன். இதனால் அனல்மின்நிலையம் 1 விரிவாக்கம், அனல் மின்நிலையம் 2 முன்பாக ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இதுகுறித்து லாரி டிரைவர் ஒருவர் கூறுகையில், உலர் சாம்பல் எடுத்து செல்லும் லாரிகளுக்கான வாடகையை உயர்த்தி தருவதாக சிமெண்டு ஆலைகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் இதுவரையில் உயர்த்தி கொடுக்கப்படவில்லை. எனவே அரசு நிர்ணயித்த எடைக்கு வாடகையை உயர்த்தி தரக்கூடிய ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு உலர் சாம்பலை எடுத்து செல்வது என்று முடிவு செய்துள்ளோம். குறிப்பாக 2 சிமெண்டு ஆலைகளுக்கு செல்லும் லாரிகள் முழுவதும் நிறுத்தப்பட்டு, டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.