பெண்ணை மிரட்டி கற்பழித்து பணம்பறித்த தொழில் அதிபர் கைது துபாயில் இருந்து திரும்பியபோது சிக்கினார்

திருமணமான பெண்ணை கற்பழித்து பணம் பறித்துவிட்டு துபாய்க்கு தப்பி சென்றவர் திரும்பி வந்த போது போலீசில் சிக்கினார்.

Update: 2017-07-18 22:15 GMT
மும்பை,

திருமணமான பெண்ணை கற்பழித்து பணம் பறித்துவிட்டு துபாய்க்கு தப்பி சென்றவர் திரும்பி வந்த போது போலீசில் சிக்கினார்.

கற்பழிப்பு

மும்பை மாகிம் பகுதியை சேர்ந்தவர் தொழில்அதிபர் மோசின் ரகீம் (வயது 27). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் 25 வயது திருமணமான பெண் ஒருவர் அறிமுகமானார். அந்த பெண், கணவருடன் இணைந்து மோசின் ரகீமின் தொழிலில் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்து இருந்தார். இந்தநிலையில் ஒருநாள் தொழில்அதிபர் தென்மும்பையில் உள்ள வீட்டை விற்க விரும்புவதாக பெண்ணிடம் தெரிவித்தார். அந்த வீட்டை பெண் வாங்க விரும்பினார்.

எனவே அவர் வீட்டை பார்க்க தொழில் அதிபருடன் சென்றார். அப்போது தொழில் அதிபர், பெண்ணை மிரட்டி கற்பழித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து கொண்டார்.

ரூ.65 லட்சம் மோசடி


இந்தநிலையில் அவர் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டி தொடர்ந்து பெண்ணை கற்பழித்து வந்தார். மேலும் பணம் பறித்து வந்தார். பெண், கணவருடன் அவரது தொழிலில் முதலீடு செய்து இருந்த பணத்தையும் தரமுடியாது என கூறினார். அவர் ரூ.65 லட்சம் பெண்ணிடம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த பெண் தனக்கு நேர்ந்த அவலங்களை கணவரிடம் கூறினார்.

பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசின் ரகீமை தேடிய போது அவர் துபாய்க்கு தப்பி சென்றது தெரியவந்தது.

கைது

இதையடுத்து போலீசார் அவரை தேடப்பட்டும் குற்றவாளியாக அறிவித்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தொழில் அதிபர் மோசின் ரகீம் துபாயில் இருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத் வந்தார். அப்போது குடியுரிமை அதிகாரிகள் அவரை அடையாளம் கண்டு பிடித்தனர். பின்னர் இதுகுறித்து மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக ஆமதாபாத் சென்ற போலீசார் மோசின் ரகீமை கைது செய்து மும்பை அழைத்து வந்தனர்.

மேலும் செய்திகள்