திருமண ஆசை காட்டி பெண் கற்பழிப்பு பால கங்காதர திலகரின் கொள்ளுப்பேரன் மீது வழக்குப்பதிவு
திருமண ஆசை காட்டி பெண்ணை கற்பழித்ததாக சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரின் கொள்ளுப்பேரன் ரோகித் திலக் மீது போலீசார் வழக்குப்பதிவு
புனே,
திருமண ஆசை காட்டி பெண்ணை கற்பழித்ததாக சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரின் கொள்ளுப்பேரன் ரோகித் திலக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரோகித் திலக்சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரின் கொள்ளுப்பேரன் ரோகித் திலக். மராட்டிய மாநிலம் புனே நகர இளைஞர் காங்கிரஸ் பிரிவு தலைவரான இவருக்கும், 40 வயது பெண் ஒருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
அந்த பெண்ணை ரோகித் திலக் திருமணம் செய்ய விரும்பியதாக தெரிகிறது. தன்னுடைய விருப்பத்தை அந்த பெண்ணிடம் கூறிய அவர், தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி பல்வேறு தருணங்களில் அவரை கற்பழித்து வந்தார்.
கற்பழிப்பு புகார்இந்த நிலையில், அந்த பெண் திருமணத்துக்கு வற்புறுத்தவே, ரோகித் திலக் அவருடன் பழகுவதை தவிர்த்தார். இதனால், பாதிக்கப்பட்ட அந்த பெண் ரோகித் திலக் மீது போலீசில் புகார் செய்தார். அதில், அவர் திருமண ஆசை காட்டி தன்னை கற்பழித்ததாகவும், இயற்கைக்கு மாறாக உறவு கொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதன்பேரில், ரோகித் திலக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரோகித் திலக் கடந்த 2014 மராட்டிய சட்டசபை தேர்தலின்போது, புனே கஸ்பா பேத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.