திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.44¼ லட்சம்

கடந்த 18 நாட்களில் திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.44¼ லட்சம்.

Update: 2017-07-18 22:30 GMT
திருத்தணி, 

திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 18 நாட்களில் உண்டியலில் வசூலாகி இருந்த காணிக்கை எண்ணும் பணி கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நடந்தது. கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் சிவாஜி, உதவி ஆணையர் ஜான்சிராணி ஆகியோர் மேற்பார்வையில் கோவில் ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் ரூ.44 லட்சத்து 40 ஆயிரத்து 672 மற்றும் 393 கிராம் தங்கம், 2 கிலோ 779 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. 

மேலும் செய்திகள்