கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை ரங்கசாமி பேட்டி

கட்சிக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று முதல்–அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

Update: 2017-07-17 21:45 GMT

புதுச்சேரி,

புதுவையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதுவை சட்டசபையில் உள்ள கமிட்டி அறையில் நேற்று நடந்தது. இந்த தேர்தல் வாக்குப்பதிவில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரான திருமுருகன் தனியாக வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி தனது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான என்.எஸ்.ஜே.ஜெயபால், டி.பி.ஆர்.செல்வம், அசோக் ஆனந்து, சுகுமாரன், கோபிகா, சந்திர பிரியங்கா ஆகியோருடன் சேர்ந்து வந்து வாக்களித்தார்.

வாக்குப்பதிவு முடிந்ததும் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

தேர்தலுக்கு முன்பு நாங்கள் பாரதீய ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு என்று அறிவித்திருந்தோம். அதன்படி இப்போது ஓட்டுப்போட்டுள்ளோம்.

திருமுருகன் எம்.எல்.ஏ.வுக்கு வேலை இருந்ததால் அவர் முன்னதாகவே வந்து ஓட்டுப்போட்டு விட்டுச் சென்றார். எங்களது கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை.

இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

மேலும் செய்திகள்