சி.ஏ.மாணவியை மானபங்கம் செய்த சிறுவன் கைது
மும்பை சர்ச்கேட் ரெயில் நிலையத்தில் சம்பவத்தன்று பயந்தரை சேர்ந்த சி.ஏ. மாணவி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
மும்பை,
மும்பை சர்ச்கேட் ரெயில் நிலையத்தில் சம்பவத்தன்று பயந்தரை சேர்ந்த சி.ஏ. மாணவி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது பிளாட்பாரத்தில் அவரை நெருங்கி வந்து கொண்டிருந்த சிறுவன் ஒருவன் திடீரென மாணவியின் உடலில் தொடக்கூடாத இடத்தில் தொட்டு மானபங்கம் செய்து விட்டு தப்பி ஓடினான். அந்த சிறுவனை மாணவி விரட்டி பிடித்து ரெயில்வே போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அந்த சிறுவனை கைது செய்தனர். விசாரணையில் அவனுக்கு 15 வயது என்பதும், மத்திய பிரதேசத்தை சேர்ந்த அவன் மும்பை காலக்கோடா பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.