நீட் தேர்வு விலக்கு பெறக்கோரி அ.தி.மு.க. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 30 பேர் கைது

தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு பெறக்கோரி அ.தி.மு.க. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 30 பேர் கைது.

Update: 2017-07-16 22:00 GMT

சென்னை,

தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறாமல் இன்று நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க கூடாது என்பதை வலியுறுத்தி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று காலை 11 மணியளவில், அந்த கழகத்தின் துணை தலைவர் எஸ்.துரைசாமி தலைமையில், தலைமை நிலைய செயலாளர் இளங்கோவன் முன்னிலையில் 30 பேர் முற்றுகையிடுவதற்காக வந்தனர்.

போலீசார் அவர்களை ராயப்பேட்டை அண்ணாசிலை அருகே மடக்கி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்