அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு மடிக்கணினி வழங்காததால் ஏழை மாணவர்கள் பாதிப்பு
அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்காததால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. மேற்படிப்பு படிக்க செல்லும் அந்த மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக மாணவர்கள் கூறுகையில், ‘நாங்கள் பிளஸ்-2 முடித்து எங்களில் சிலர் கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் சேர்ந்து விட்டனர். எங்களுக்கு பள்ளிகளில் மடிக்கணினி வழங்கப்படாததால் தற்போது சிரமப்படுகிறோம். கணினி அறிவியல் படிப்பை தேர்வு செய்த ஏழை மாணவர்களால் மடிக்கணினியை விலை கொடுத்து வாங்குவது இயலாது. எனவே அரசு உடனடியாக எங்களுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில் ‘கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. முதன்மை கல்வி அதிகாரியிடம் இருந்து எங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை’ என்றனர்.
பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ரெ.இளங்கோவனிடம் இது பற்றி கேட்டபோது, ‘மடிக்கணினி வழங்குவது எல்காட் நிறுவனம். அந்நிறுவனம் மடிக்கணினிகளை தந்தால் அவற்றை முதன்மை கல்வி அதிகாரி மூலம் பள்ளிகளுக்கு கொடுப்போம். பின்னர் மாணவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும்’ என்றார்.