ஜி.எஸ்.டி. வரியால் தேயிலைத்தூளை வாங்க வர்த்தகர்கள் மறுப்பு: விவசாயிகள் கவலை
ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதால் தேயிலைத்தூளை வாங்க வர்த்தகர்கள் மறுக்கிறார்கள்.
குன்னூர்,
இதனால் சிறு தேயிலை தொழிற்சாலைகளில் நேற்று முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பச்சை தேயிலை கொள்முதல் செய்யப் படாததால் விவசாயிகள் கவலை அடைந்துள் ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சிறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். இவர்கள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை மாவட்டத்தில் உள்ள 102 வாங்கும் தேயிலை தொழிற்சாலை என்று அழைக்கப்படும் சிறு தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகிறார்கள். இது மட்டுமின்றி மாவட்டத்தில் இயங்கும் 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கும், அங்கு உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் பச்சை தேயிலையை வினியோகம் செய்து வருகிறார்கள்.
பச்சை தேயிலையை சிறு தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கும் விவசாயிகளுக்கு வார விலை என்றும், மாத விலை என்றும் இரு விலைகள் வழங்கப்படுகின்றன. வாரந்தோறும் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாட்கள் நடைபெறும் தேயிலை ஏலத்தின் விற்பனை விலையை கொண்டு வார விலை நிர்ணயித்து வருகிறார்கள்.
மத்திய அரசின் சார்பில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்துவது குறித்து அறிவிப்பு வந்தவுடன் குன்னூர் தேயிலை ஏல மையத்தில் பங்கு பெறும் பெரிய வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் பங்களிப்பு குறைந்தது. மேலும் அவர்கள் தேயிலைத்தூளை வாங்க மறுத்தனர். இதனால் விற்பனை விலை வீழ்ச்சி அடைந்து தேயிலைத்தூள் தேக்கம் அடைந்தது. தேயிலைத்தூள் விற்பனை ஆகாததால் உற்பத்தியாளர்களால் விவசாயிகளுக்கு விலை நிர்ணயம் செய்து பச்சை தேயிலைக்கு விலை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்ட சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நேற்று முதல் வருகிற 21-ந் தேதி வரை பச்சை தேயிலை விவசாயிகளிடம் இருந்து வாங்குவதில்லை என்றும், சிறு தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தியை நிறுத்துவது என்றும் முடிவு செய்தனர். இதன் அடிப்படையில் நேற்று முதல் மாவட்டத்தில் உள்ள 102 சிறு தேயிலை தொழிற்சாலைகளிலும் உற்பத்தி நிறுத்தப் பட்டது. தொழிற்சாலை களில் உள்ள எந்திரங்கள் இயக்கப்படவில்லை. மேலும் தேயிலை விவசாயிகளிடம் இருந்து பச்சை தேயிலை கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை
இது குறித்து நீலகிரி மாவட்ட தேயிலை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆனந்தன் கூறியதாவது:-
வடநாட்டில் உள்ள நடைமுறையை தேயிலை வர்த்தகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று பெரிய வர்த்தகர்கள் கூறுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை அதனை அமல்படுத்த முடியாது. அதற்கு தேயிலை சட்டத்திலும் இடமில்லாமல் உள்ளது. தேயிலை ஏலத்தில் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்த தேயிலைத்தூள் தனியாக விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் தரகர் மூலம் இந்த தேயிலை விற்பனை செய்யப்படுவதால் எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்தார்கள் என்பது தெரியாது. இது உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தேயிலைத்தூள் தேக்கம் அடையாமல் விற்பனையாகுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை வலியுறுத்தி இன்று (நேற்று) முதல் வருகிற 21-ந் தேதி வரை ஒரு வாரம் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இந்த பிரச்சினை தொடர்பாக இதுவரை தேயிலை வாரியம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்.