திருவண்ணாமலையில் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம்

திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம் நடந்தது.

Update: 2017-07-15 00:02 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம் (கடன் மேளா) தியாகி அண்ணாமலைபிள்ளை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பயனாளுக்கு கடன் பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை வழங்கினார். இதில் 60 பேர், கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்றனர்.

முகாமில் மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தண்டாயுதபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்