நடிகை காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெரம்பலூர் வக்கீல் முருகையன் அளித்த மனுவில்
பெரம்பலூர்,
தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்டு வரும் ஒரு நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம், தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது எங்கள் சமுதாய மக்களை காயப்படுத்தி உள்ளது. எனவே தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு பாதுகாப்பு சட்டம் 2015–ன்கீழ் காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை பெற்று கொண்ட தனிப்பிரிவு போலீசார் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.