வங்காளதேச நாட்டுக்கான இந்திய தூதரக அதிகாரி நாராயணசாமியுடன் சந்திப்பு
வங்காளதேச நாட்டுக்கான இந்திய தூதரக உயர் ஆணையாளர் சையத் மவுசம் அலி ஜிப்மர் நிறுவன நாள் விழாவில் கலந்துகொள்ள புதுச்சேரி வந்திருந்தார்.
புதுச்சேரி,
வங்காளதேச நாட்டுக்கான இந்திய தூதரக உயர் ஆணையாளர் சையத் மவுசம் அலி ஜிப்மர் நிறுவன நாள் விழாவில் கலந்துகொள்ள புதுச்சேரி வந்திருந்தார். அவர் நேற்று கவர்னர் கிரண்பெடி, முதல்–அமைச்சர் நாராயணசாமி ஆகியோரை மரியாதை நிமித்தமாக தனித்தனியே சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது அவர்களுக்கு புத்தகங்களை பரிசளித்தார். அவருக்கு கவர்னர் கிரண்பெடியும், முதல்–அமைச்சர் நாராயணசாமியும் நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.