தஞ்சை அருகே பழுதாகி நின்ற சரக்கு ஆட்டோ மீது அரசு பஸ் மோதல் என்ஜினீயரிங் மாணவி உள்பட 9 பேர் பலி
தஞ்சை அருகே பழுதாகி நின்ற சரக்கு ஆட்டோ மீது அரசு பஸ் மோதியது. இதில் இரும்பு கம்பி குத்திக்கிழித்ததில் என்ஜினீயரிங் மாணவி உள்பட 9 பேர் பலியானார்கள்.
வல்லம்,
திருப்பூரில் இருந்து நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் ரவிச்சந்திரன் ஓட்டி வந்தார். பஸ்சில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ் இரவு 7 மணி அளவில் தஞ்சையை அடுத்த வல்லம் பைபாஸ் சாலையில் உள்ள பாலத்தில் வந்து கொண்டிருந்தது.
இதே போல் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு இரும்புகம்பிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ஆட்டோ ஒன்று வந்தது. இந்த ஆட்டோ வல்லம் பைபாஸ் சாலையில் வந்த போது பழுதானது. இதையடுத்து சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த சதீஷ்குமார் பாலத்தின் ஓரத்தில் சரக்கு ஆட்டோவை நிறுத்தினார்.
பயங்கரமாக மோதியது
அப்போது வேகமாக வந்த பஸ் எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் சரக்கு ஆட்டோவில் இருந்த இரும்புகம்பிகள் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பயணிகள் மீது குத்தியது. இதில் வலி தாங்க முடியாமல் பயணிகள் அலறினர். மேலும் பஸ் மோதிய வேகத்தில் சிறிது தூரம் சரக்கு ஆட்டோவை தள்ளி சென்று நின்றது. மேலும் பஸ்சின் முன்பக்க டயரும் வெடித்தது. இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ அப்பளம்போல நொறுங்கியது. பஸ்சின் முன்பக்கமும் பலத்த சேதம் அடைந்தது.
இதில் சரக்கு ஆட்டோ டிரைவர் மற்றும் பஸ்சில் சென்ற 5 பயணிகள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் பயணிகள் அலறல் சத்தம் கேட்டு, அந்த வழியாக சென்றவர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு ஓடி வந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் வல்லம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் ஆம்புலன்சும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப் பட்டன.
24 பேர் படுகாயம்
உடனடியாக படுகாயம் அடைந்த 22 பேரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி 3 பேர் இறந்தனர். 9 பெண்கள் உள்பட 19 பேர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும், 5 பேர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் என மொத்தம் 24 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து நடந்த இடத்தில் கம்பிகள் சிதறி கிடப்பதால் மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சாலையில் கண்ணாடிகள் சிதறிக் கிடந்தன.
விபத்தில் இறந்த 9 பேரில் 6 பேரின் பெயர் விவரங்கள் உடனடியாக தெரிய வந்தது. அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. பூங்குழலி (வயது40) மருதமுத்து நகர், கும்பகோணம்.
2. அருள்மொழி (40) மருதமுத்து நகர், கும்பகோணம்.
3. மாலினி (19) இருகையூர், டி.பழூர். இவர் திருச்சியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
4. ரவிச்சந்திரன். அரசு பஸ் டிரைவர்.
5. சதீஷ்குமார், சரக்கு ஆட்டோ டிரைவர்.
6) ஹேமலதா (45), தேவி நகர், ரெட்டிப்பாளையம் தஞ்சை.
மற்றவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.
படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 19 பேரின் பெயர் விவரம் கிடைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1. பிரியதர்ஷினி (20).
2. வரதராஜன் (36).
3. பிரியா (24).
4. சுகந்தி (20).
5. புவனா (20).
6. ஜானகிராமன் (20).
7. சுஷ்மிதா.
8. ராஜசேகர்.
9. சகுந்தலா.
10. சுகன்யா.
11. தினேஷ்குமார்.
12. முகமது அஷ்ரப் ரகுமான்.
13. ராஜாமணி.
14. குமார்.
15. அட்சயா.
16. சிவகுமார்.
17. தர்மராஜன்.
18. அருட்செல்வி.
19. சுகானா ஷெரீப்.
போலீஸ் விசாரணை
இந்த விபத்து குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.