பணி நிரந்தரம் செய்யக் கோரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி தஞ்சையில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி முன்பு தமிழ்நாடு கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நிர்வாகி நெடுமாறன் தலைமை தாங்கினார். சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அரசு கலை மற்றும் அறிவியல்் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி பல முறை அரசுக்கு மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 2003-ம் ஆண்டு முதல் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகிறோம். கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆண்டுக்கு 10 மாதங்கள் மட்டுமே ஊதியம் பெற்று வருகிறோம்.
மாதம்தோறும் ரூ.15 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. 40, 50 வயதை கடந்தும் இன்னும் பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் என்று எந்தவித சலுகையும் இன்றி பணி புரிந்து வருகிறோம். எனவே கவுரவ விரிவுரையாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை பல்கலைக்கழக மானியக்குழுவின்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கவுரவ விரிவுரையாளர்கள் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எங்களது கோரிக்கைகள் மீது தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடத்த முடிவு செய்து இருக்கிறோம் என கவுரவ விரிவுரையாளர்கள் தெரிவித்தனர்.