ராமேசுவரத்தில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்
ராமேசுவரத்தில் வெளியூர் ஆட்டோக்கள் இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேசுவரம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமேசுவரம்
ராமேசுவரத்தில் வெளியூர் ஆட்டோக்கள் இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேசுவரம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் நகர் செயலாளர் நாசர்கான், அவை தலைவர் சண்முகம், காங்கிரஸ் சார்பில் மாவட்ட பொருளாளர் பாரிராஜன், பா.ஜ.க. சார்பில் நகர் தலைவர் ஸ்ரீதர், சட்டமன்ற பொறுப்பாளர் பவர் நாகேந்திரன், பொதுச் செயலாளர் நம்புராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் சி.ஆர்.செந்தில், இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் முருகானந்தம், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன், தமிழர் தேசிய முன்னணி சார்பில் கண்.இளங்கோ உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வெளியூரில் அனுமதி பெற்றுள்ள ஆட்டோக்களை ராமேசுவரத்தில் இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.