பெலகாவி இண்டல்கா சிறையில் கைதிகள் மவுன போராட்டம்
சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கு ஆதரவாக பெலகாவி இண்டல்கா சிறையில் கைதிகள் நேற்று மவுன போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு,
அதில், ‘அ.தி.மு.க (அம்மா) அணி செயலாளர் சசிகலாவுக்கு தனி சமையல் அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்காக தாங்கள் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கி இருப்பதாக தகவல்கள் உள்ளன. கைதிகளுக்கு கஞ்சா வினியோகிக்கப்படுவது தடுக்கப்படாமல் இருப்பதோடு, சில கைதிகளுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் தங்கள் மீது சுமத்தப்பட்டு உள்ள களங்கத்தை போக்க வேண்டும்‘ என கூறப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக நேற்று கருத்து தெரிவித்த சிறைத்துறை போலீஸ் டி.ஜி.பி. சத்தியநாராயணராவ், ‘தான் லஞ்சம் எதுவும் வாங்கவில்லை எனவும், சிறைத்துறை டி.ஐ.ஜி.யின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது‘ எனவும் கூறினார். இந்த நிலையில், சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணாராவுக்கு ஆதரவாக பெலகாவி இண்டல்கா சிறையில் 100–க்கும் அதிகமான கைதிகள் நேற்று சிறையில் மவுன போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.இந்த போராட்டத்தின்போது அவர்கள் ‘சிறை கைதிகளுக்காக சிறப்பு நடவடிக்கைகளை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு எதிராக டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டுவது சரியல்ல‘ என அவர்கள் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதேபோல், நேற்று பரப்பனஅக்ரஹாரா சிறையிலும் டி.ஜி.பி. சத்தியநாராயணாவுக்கு ஆதரவாக கைதிகள் மவுன போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.