மண் சரிந்து விழுந்து பெண் சாவு

வாடிப்பட்டி அருகே உள்ள குலசேகரன்கோட்டையை சேர்ந்தவர் கண்ணன் மனைவி கிருஷ்ணம்மாள் (வயது 28).

Update: 2017-07-13 23:02 GMT

வாடிப்பட்டி,

 இவர்களுக்கு கலையரசி என்ற மகளும், நவீன்குமார் என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று வீட்டு உபயோகத்திற்காக கிருஷ்ணம்மாள், தனது சகோதரர் காட்டுராஜா (25) என்பவருடன் பொன்பெருமாள் கண்மாய் கரை பகுதியில் சவடுமண் அள்ளிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கரையின் மேல்பகுதியிலிருந்த மண் சரிந்து அவர்கள் மீது விழுந்தது.

அதில் கிருஷ்ணம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த காட்டுராஜாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். தகவலறிந்த மண்டல துணை தாசில்தார் நாகேந்திரன், வாடிப்பட்டி வருவாய் ஆய்வாளர் முத்துசங்கர், கிராம நிர்வாக அதிகாரி குருபாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்