தடுப்பணை கட்டுமான பணியின்போது கிரேன் அறுந்து விழுந்து தொழிலாளி பலி
வேதாரண்யம் அருகே தடுப்பணை கட்டுமான பணியின் போது கிரேன் அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கள்ளிமேடு அடப்பாற்றில் உப்புநீர் உட்புகா வண்ணம் கடந்த 2 மாதமாக தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை தடுப்பணை கட்டுமான பணியின் போது கிரேன் திடீரென அறுந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த ஆந்திர மாநிலம் ஜிலேஜி ஜெர்ரி பத்ரா கிராமத்தை சேர்ந்த சங்கர்ராவ்(வயது29) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த முகுந்தராவ்(46), உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராம்கிஷோர்(48), ஒடிசாவை சேர்ந்த நர்கிஷ்(20), குமு(23) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த வேட்டைகாரனிருப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்த சங்கர்ராவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயம் அடைந்த 4 பேரை சிகிச்சைக்காகவும் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரேன் ஆப்ரேட்டர் படேலை தேடி வருகின்றனர்.