திருவாரூரில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
திருவாரூர்் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் மாரி முத்து தலைமை தாங்கி னார். கோட்ட செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கோட்ட செயலாளர் கருணாநிதி பேசினார்.
எல்.ஐ.சி. பிரிமியங்கள் மற்றும் தாமதமாக கட்டப்படும் பிரிமியங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். பாலிசிகளுக்கான போனஸ் விகிதத்தை உயர்த்த வேண்டும். எல்.ஐ.சி. மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும். பாலிசி கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் கோட்ட செயற்குழு உறுப்பினர் விஜயராஜ், மாவட்ட பொருளாளர் அறிவழகன், மாவட்ட துணைத் தலைவர் பிரசாத், கிளைதலைவர் தெட்சிணாமூர்த்தி, கிளை செயலாளர் செந்தில்குமார், கிளை பொருளாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.