என்.எஸ்.ஆர். சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி போலீஸ் கமிஷனரிடம் மனு
கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர். சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை,
பல்சமய நல்லுறவு இயக்க மாநில தலைவர் முகமது ரபி, ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராமசாமி, துணை தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் பாண்டுரங்கன், வின்னஸ்ரவி ஆகியோர் நேற்றுக்காலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர். ரோட்டில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள உள்ள பகுதியில் 20 நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுக்கடை புதிதாக திறக்கப்பட்டுள்ளது.
அந்த கடைக்கு அருகே பஸ் நிறுத்தம், தனியார் பள்ளி மற்றும் குடியிருப்புகள் உள்ளன. என்.எஸ்.ஆர். பஸ் நிறுத்தத்தில் இருந்து காலை, மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் மற்றும் மாணவ -மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்வதற்கு காத்திருப்பார்கள்.
டாஸ்மாக் மதுக்கடையில் மதுகுடித்து விட்டு போதையில் வருபவர்கள் அந்த பஸ் நிறுத்தத்தில் அலங்கோலமாக படுத்து கிடக்கிறார்கள. மேலும் மதுகுடித்து விட்டு வெளியே வருபவர்கள் தகாத வார்த்தைகளால் பேசிக் கொள்வதால் பெண்கள், மாணவர்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது.
அந்த டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்க நீண்ட வரிசையில் நிறைய பேர் நிற்கிறார்கள். இதனால் மாலை நேரங்களில் என்.எஸ்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே அந்த டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவின் நகல் கலெக்டர் அலுவலகத்திலும் வழங்கப்பட்டது.