அவினாசி, ஊத்துக்குளி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
அவினாசி, ஊத்துக்குளி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார்.
அவினாசி,
திருப்பூர் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய கொசு ஒழிப்பு பணிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளான கொசுப்புகை மருந்து அடித்தல், அபேட் மருந்து தெளித்தல் மற்றும் காய்ச்சல் கணக்கெடுப்பு, மருத்துவ முகாம் நடத்துதல் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது.
பொதுமக்களிடையே கொசு ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளான துண்டு பிரசுரம் வழங்குதல், விழிப்புணர்வு திரைப்படங்கள் திரையிடுதல், பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை கண்காணித்தல் மற்றும் கொசு உற்பத்தியாவதை தடுப்பதற்காக, ஆங்காங்கே தேங்கியுள்ள குப்பைகளை அள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் கே.எஸ். பழனிசாமி ஊத்துக்குளி பேரூராட்சி, பாரதிதாசன் நகர் மற்றும் அவினாசி ஊராட்சி ஒன்றியம் வேலாயுதம்பாளையம், சேவூர், தெக்கலூர், செம்பியநல்லூர், பழங்கரை ஊராட்சி, அவினாசிலிங்கம்பாளையம் ஆகிய பகுதிகளில், டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் சுகாதார பணிகளை நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் கூறுகையில் “பொதுமக்கள் தங்களது வீடுகளின் உட்புறம் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுப்புழு உற்பத்தி ஆகாமல் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் வராமல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குடிநீரினை சேமித்து வைக்கும் பாத்திரங்களை பாதுகாப்பாக நன்கு மூடிவைக்க வேண்டும், தேங்காய் சிரட்டை, பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தேவையில்லாத பொருட்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். பொதுமக்களுக்கு தொடர் காய்ச்சல் இருந்தால் கட்டாயம் ரத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
மேலும், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பொதுமக்களுக்கு கொசுவினால் ஏற்படக்கூடிய காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், சுகாதார பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, தாசில்தார்கள் விவேகானந்தன் (அவினாசி), அருணா (ஊத்துக்குளி), அவினாசி மற்றும் ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கிடையே பாரதிதாசன்நகரில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக வறட்சி நிவாரண நிதியில் இருந்து அமைக்கப்பட்டிருந்த ஆழ்குழாய் கிணறுகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.