தனியார் பஸ் உரிமையாளர்கள், டிரைவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

தனியார் பஸ் உரிமையாளர்கள், டிரைவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2017-07-13 22:45 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் காவலர் சமுதாய கூடத்தில் நேற்று காலை தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தமிழ்நாடு தனியார் பஸ் சம்மேளன பொருளாளர் ராஜாபாதர் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ், தலைவர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விழுப்புரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், வட்டார போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன் ஆகியோர் கலந்துகொண்டு சாலை விபத்துகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

அதாவது குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது, அதிவேகமாக செல்லக்கூடாது, செல்போன் பேசியபடி இயக்கக்கூடாது, அலட்சியத்துடன் வாகனத்தை இயக்க கூடாது, தேவையற்ற இடத்தில் மற்ற வாகனங்களை முந்திச்செல்வதை தவிர்க்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு அறிவுரைகள் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விழுப்புரம் சிவக்குமார், உளுந்தூர்பேட்டை சுந்தர்ராஜன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த், விஸ்வநாத், பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்