விழுப்புரத்தில் மாநில சமூகநீதி மாநாடு பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
செப்டம்பர் 17-ந் தேதி விழுப்புரத்தில் மாநில சமூகநீதி மாநாடு நடத்துவது என்று பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் தங்கஜோதி தலைமை தாங்கினார். மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் அன்புமணி, மாநில துணை பொதுச்செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் புகழேந்தி அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில், விழுப்புரத்தில் வருகிற 18-ந் தேதி வன்னியர் சங்க தலைவர் குரு கலந்து கொள்ளும் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது, விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 60 ஆயிரம் உறுப்பினர்களை சேர்ப்பது, வருகிற செப்டம்பர் மாதம் 17-ந் தேதி விழுப்புரத்தில் மாநில சமூகநீதி மாநாடு நடத்துவது, விழுப்புரம் ரெயில்வே மேம்பால பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும், தென்பெண்ணையாற்றில் மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட தலைவர் ஆதிநாராயணன், மாநில துணைத்தலைவர் ஹரிகரன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் புண்ணியகோடி, மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வேல்முருகன், நகர தலைவர் ராஜா, செயலாளர்கள் ராம்குமார், ஹரிதாஸ் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.