மாமல்லபுரத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை
தஞ்சை மாவட்டம், பேராவூரணி பகுதியைச் சேர்ந்தவர் சுகந்திரவீரபாண்டியன் (வயது 21). மாமல்லபுரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
மாமல்லபுரம்,
இந்த நிலையில் சுகந்திரவீரபாண்டியன் 7 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. மேலும் அவர் கல்வி கட்டணமும் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. எனவே கல்வி கட்டணம் செலுத்துமாறு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இதனால் விரக்தி அடைந்த மாணவர் சுகந்திரவீரபாண்டியன் கல்லூரி விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த சக மாணவர்கள் விடுதிமுன்பு திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வர்ட் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.