இன்று திருமணம் நடக்க இருந்தநிலையில் புதுப்பெண் தீக்குளித்தார்

இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் தந்தையிடம் போதுமான பணம் இல்லாததால் விரக்தி அடைந்து புதுப்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

Update: 2017-07-12 23:15 GMT

வில்லியனூர்,

வில்லியனூர் அருகே உள்ள கூடப்பாக்கம் பேட் சேர்ந்தவர் கலிவரதன் (வயது 60). தொழிலாளி. இவருடைய மகள் கோவிந்தம்மாள் (வயது 29). இவருக்கு இன்று (வியாழக்கிழமை) திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அவரது தந்தை கலிவரதன் செய்து வந்தார். திருமண செலவுக்கு போதுமான பணம் இல்லாததால் பலரிடம் கடன் வாங்கி இருந்தார்.

இந்த பணம் திருமணத்திற்கு போதவில்லை. இதனால் கலிவரதன் மன வருத்தம் அடைந்தார். இதுபற்றி தெரியவந்ததும் புதுப்பெண் கோவிந்தம்மாள் விரக்தி அடைந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் வலிதாங்க முடியாமல் அலறினார்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது கோவிந்தம்மாள் தீயில் எரியவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே தீயை அணைத்து அவரை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணவிழா காண இருந்தநிலையில் புதுப்பெண் தீக்குளித்த சம்பவத்தால் இன்று நடைபெற இருந்த திருமணம் நின்று போனது.

மேலும் செய்திகள்