மின்சாரம் தாக்கி சிறுவன் பலி; குழந்தை படுகாயம்
கொள்ளிடம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான். மேலும் இந்த விபத்தில் 2 வயது குழந்தை படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறது.
கொள்ளிடம்,
நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே மகேந்திரப்பள்ளி பெரிய தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் ராகேஷ் (வயது 4). அதே பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் தர்ஷன் (2). இவர்கள் இருவரும் நேற்று அப்பகுதியில் யாரும் வசிக்காத ஒரு பாழடைந்த ஓட்டு வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது இருவரும் அங்கிருந்த மின்சார வயரை பிடித்துள்ளனர். இதில் மின்சாரம் தாக்கி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சிறுவன் ராகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
மேலும், படுகாயம் அடைந்த தர்ஷன் கொள்ளிடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவன் ராகேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.