தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடக்கோரி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடக்கோரி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2017-07-12 22:45 GMT
திருவெறும்பூர்,

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடக்கோரி நேற்று மாலை திருவெறும்பூர் கடைவீதியில் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொழிற்சாலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், இதற்கு ஒரு நல்ல முடிவு வரும் வரை சட்ட மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றார். 

மேலும் செய்திகள்