நீட் தேர்வுக்கு விலக்கு கோரி ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு கோரி தி.மு.க., கரங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, முஸ்லிம் லீக், த.மு.மு.க.,
காஞ்சீபுரம்,
மனித நேய மக்கள் கட்சி அடங்கிய ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் டி.ஏ.ஜி.அசோகன் தலைமை தாங்கினார். தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்க செயல் தலைவர் தயாளன் கண்டன உரையாற்றினரர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் சன்பிராண்டு கே.ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் சி.வி.எம்.அ. சேகர், காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் ஜீ.வி.மதியழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் கலைவடிவன், துணை செயலாளர் திருமாதாசன் உள்பட பலர் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.