உலக மக்கள் தொகை தினத்தையொட்டி கல்லூரி மாணவ–மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
நாகர்கோவிலில், உலக மக்கள் தொகை தினத்தையொட்டி கல்லூரி மாணவ–மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை, குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 11–ம் தேதி ‘உலக மக்கள் தொகை தினமாக‘ கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, உலக மக்கள் தினத்தையொட்டி நாகர்கோவிலில் கல்லூரி மாணவ–மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் கலந்துகொண்டார்.
பேரணியில், அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி, இந்துக்கல்லூரி, கிராஸ் மருத்துவ கல்வி நிறுவன மாணவ–மாணவிகள் என மொத்தம் 500–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்கள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.
இந்த பேரணியானது, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேப்பமூடு சந்திப்பு, அண்ணா பஸ் நிலையம், புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி வழியாக கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில், இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) வசந்தி, ரியஸ் முகம்மது, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் (மாவட்ட குடும்ப நலச்செயலகம்) டேவிட் ஞானசேகர், விமலநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.