கோவில் இடம் என்று கூறி பத்திரப்பதிவுக்கு விதித்த தடையை நீக்க கோரி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீரங்கத்தில் கோவில் இடம் என்று கூறி பத்திரப்பதிவுக்கு விதித்த தடையை நீக்க கோரி 4 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீரங்கம்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதிக்குழு சார்பில் தேவி தியேட்டர், திருவானைக்காவல், வடக்குவாசல், மேலூர் ஆகிய இடங்களில் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கிளை செயலாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், ஸ்ரீரங்கம் பகுதிக்குழு செயலாளர் வேளாங்கண்ணி, மாவட்டக்குழு உறுப்பினர் வீரமுத்து ஆகியோர் பேசினர். திருவானைக்காவல் நாலுகால் மண்டபம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் விஜயலெட்சுமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேணுகா பேசினார்.
வடக்குவாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன் பேசினார். மேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் நரசிம்மன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிசாமி பேசினார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று கூறி பத்திரப்பதிவுக்கு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும், திருவானைக்காவல் வடக்கு 5-ம் பிரகாரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
மேலூரில் செயல்படாமல் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பகுதிக்குழு உறுப்பினர்கள் அருணகிரி, அயன்ராஜ், வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.