தலையில் கல்லைப்போட்டு கட்டிட மேஸ்திரி படுகொலை காதல் தகராறா? போலீசார் விசாரணை
வேலூரில் கட்டிட மேஸ்திரி தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்யப்பட்டார். காதல் தகராறு காரணமாக கொலை நடந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்,
வேலூர் சைதாப்பேட்டை மலையடிவாரத்தில் கன்னிக்கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
கன்னிக்கோவிலின் பின்புறத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். வாலிபரின் தலை மற்றும் முகம் சிதைந்து காணப்பட்டது. தலையில் கல்லைப்போட்டு வாலிபரை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. கோவில் சுவரில் ரத்தம் சிதறியிருந்தது. மேலும் கோவில் வளாகத்திலும் ரத்தம் படிந்திருந்தது. அவருடைய உடலை சுற்றிலும் சீட்டுக்கட்டுகள் சிதறிக்கிடந்தன.
போலீசார் விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபர் வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்த வேலு மகன் பிரபாகரன் (வயது 21) என்பதும், கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரது கையில் ஒருபெண்ணின் பெயரை பச்சை குத்தியிருந்தார்.
மலையடிவாரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைந்துள்ள கோவில் வளாகத்தில் பிரபாகரன் மற்றும் சிலர் சீட்டு விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் பிரபாகரன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அதற்கு பெண்ணின் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே காதல் தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர்.
கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ரத்தம் படிந்த கத்தி ஒன்று கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து கொலை செய்யப்பட்ட பிரபாகரனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம் மற்றும் போலீசார் உடனிருந்தனர். தொடர்ந்து கொலை நடந்த இடத்துக்கு போலீஸ் துப்பறியும் மோப்பநாய் சிம்பா வரவழைக்கப்பட்டது. அது அங்கிருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்று விட்டது.
இந்த படுகொலை குறித்து வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.