ஜி.எஸ்.டி வரி விதிப்பை ரத்து செய்யக்கோரி அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

ஜி.எஸ்.டி வரி விதிப்பை ரத்து செய்யக்கோரி அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

Update: 2017-07-11 22:45 GMT
குடியாத்தம்,

குடியாத்தத்தில் தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம்லீக், மனிதநேய ஜனநாயக கட்சி, வணிகர் சங்க பேரமைப்பு உள்ளிட்டவைகளின் சார்பில் மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி கட்டணத்தை ரத்து செய்யக்கோரியும், அதனை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தி.மு.க பொறுப்பாளர் சவுந்தர்ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் காத்தவராயன், இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் துரைசெல்வம், விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் குமரேசன், வணிகர் சங்க பேரமைப்பு மாநில துணை தலைவர் என்.இ.கிருஷ்ணன், முஸ்லீம்லீக் மாவட்ட பொருளாளர் ரகமத்துல்லாகான் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் “ஜி.எஸ்.டி வரி விதிப்பால் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் தண்ணீர்கேன், மருந்து, நோட்டு-புத்தகம், கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட 500 பொருட்கள் வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. எனவே ஜி.எஸ்.டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும்” என கூறினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ லிங்கமுத்து, தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் கள்ளூர் ரவி, கிருஷ்ணமூர்த்தி, கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சாமிநாதன், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்