தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து 2 யானைகள் அட்டகாசம்
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த 2 யானைகள் தென்னங்கன்றுகள், வாழைகளை சேதப்படுத்தின.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள தலமலை வனப்பகுதியில் ஏராளமான மான், யானை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் வனவிலங்குகள் அருகே உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிரை சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து 2 யானைகள் வெளியேறின. இந்த யானைகள் வனப்பகுதியையொட்டி கோடிபுரத்தில் உள்ள மல்லு என்ற விவசாயியின் தென்னந்தோப்புக்குள் புகுந்தது. அங்கு நடப்பட்டிருந்த தென்னங்கன்றுகளின் குருத்துக்களை துதிக்கையால் ஒடித்து தின்றன. பின்னர் தென்னங்கன்றுகளை காலால் மிதித்து நாசப்படுத்தின.
அதைத்தொடர்ந்து அருகே உள்ள அவரது கதலி ரக வாழை தோட்டத்துக்குள் புகுந்தன. அங்கு வாழைகளை துதிக்கையால் முறித்து தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தி கொண்டிருந்தன. இதை பார்த்த நாய்கள் குரைத்தது. சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த மல்லு தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அங்கு 2 யானைகள் நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.