ஸ்ரீபெரும்புதூரில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ–சேவை மையத்தில் அலுவலர் ரபி என்பவரிடம் வக்கீல்கள் பழனி, விமல் ஆகியோர் ஆதார் அட்டை வழங்க கோரி மனு செய்தனர்.

Update: 2017-07-10 21:42 GMT

ஸ்ரீபெரும்புதூர்,

இது தொடர்பாக ரபிக்கும், வக்கீல்களுக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும், அப்போது அங்கு வந்த தாசில்தார் ஏழுமலை, வக்கீல்கள் இருவரையும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வக்கீல்களை தாக்கிய தாசில்தார் ஏழுமலை, இ–சேவை மைய அலுவலர் ரபி, துணை தாசில்தார் ராஜன், கிராம நிர்வாக அலுவலர் விமலா, சர்வேயர் வாஞ்சிநாதன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீபெரும்புதூர் போலீசில் வக்கீல்கள் புகார் செய்தனர்.

ஆனால் அதன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வக்கீல்கள் பழனி, செல்வமணி, சந்தோஷ் ஆகியோர் தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட வக்கீல்கள் கலந்து கொண்டு கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்