போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் நகை கொள்ளை: கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் விசாரணை
குளச்சலில் போலீஸ் போல நடித்து மூதாட்டியிடம் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை கண்டுபிடிக்க அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குளச்சல்,
குளச்சல் பகுதியை சேர்ந்த ரெத்தினம் (வயது 72) நேற்று முன்தினம் அருகில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார். மகளை பார்த்துவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தங்களை போலீஸ்காரர்கள் எனக்கூறி அறிமுகம் செய்தனர். அத்துடன், நகைகளை அணிந்து செல்வது பாதுகாப்பாக இருக்காது, எனவே அவற்றை கழற்றி தாருங்கள், பொதிந்து தருகிறோம் என்று அறிவுரை கூறினர்.
அவர்களின் பேச்சை நம்பிய ரெத்தினம் தான் அணிந்திருந்த தங்க சங்கிலி, 2 வளையல் என 6½ பவுன் நகையை கழற்றி வாலிபர்களிடம் கொடுத்தார். அவற்றை பெற்றுக்கொண்ட வாலிபர்கள் ரெத்தினத்திடம் ஒரு பொட்டலத்தை கொடுத்து அனுப்பினர். அந்த பொட்டலத்தை ரெத்தினம் வீட்டில் சென்று பிரித்து பார்த்த போது, நகைகள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நூதன கொள்ளை குறித்து குளச்சல் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் இதுபற்றி தீவிர விசாரணையில் இறங்கினர். ரெத்தினம் தினமும் அந்த வழியாக சென்று வருவதை நோட்டமிட்ட நபர்களே கைவரிசை காட்டியிருக்க வேண்டும் என தெரிகிறது. இதனால், அவர்கள் உள்ளூர் கொள்ளையராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கொள்ளை நடந்த இடத்தில் உள்ள நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அவற்றில் பதிவான காட்சிகள் மூலம் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.