விவசாய நிலத்தில் இறந்து கிடந்த 6 மயில்கள் வனத்துறையினர் விசாரணை
கரூரில் விவசாய நிலத்தில் இறந்து கிடந்த 6 மயில்களை கைப்பற்றி விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கரூர் கொளாந்தாகவுண்டனூர் பகுதியில் செந்தில் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. தற்போது அதில் விவசாயம் எதுவும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் நேற்று காலை அந்த விவசாய நிலத்தில் 6 மயில்கள் ஆங்காங்கே இறந்து கிடந்தன. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் கோட்ட வன அலுவலர் அன்பு உத்தரவின் பேரில் வனச்சரகர்கள் அள்ளிராஜ், சந்திரன் மேற்பார்வையில் வனவர்கள் ரமேஷ், ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் ஆங்காங்கே இறந்து கிடந்த 6 ஆண் மயில்களை வனத்துறையினர் கைப்பற்றினர்.
விஷம் வைத்து கொல்லப்பட்டதா?
மேலும் மயில்களை கொளந்தாகவுண்டனூரில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு கால்நடை டாக்டர்கள் அடங்கிய குழுவினர் 6 மயில்களை பிரேத பரிசோதனை செய்தனர். விஷம் கலந்த உணவை தின்றதால் 6 மயில்களும் இறந்திருக்கலாம் என வனத்துறையினர் கருதினர்.
மேலும் அந்த பகுதியில் விவசாய நிலங்களில் பயிர்களை மயில்கள் தொடர்ந்து சேதப்படுத்தி வந்ததால் மர்ம நபர்கள் யாரேனும் மயில்களை விஷம் வைத்து கொன்றனரா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனையின் அறிக்கை வெளிவர ஒரு வார காலமாகும். அதன்பிறகு தான் மயில்கள் எப்படி இறந்தது என உறுதியாக தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்ததும் 6 மயில்களும் காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டன. மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.