நெல்லையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
நெல்லையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லை வண்ணார்பேட்டையில் சிந்தாமணி தெரு, அப்பர்சுவாமி தெரு, கம்பராமாயணத்தெரு, காசீம்காலனி, சாலை தெரு, வெற்றிவேலடி விநாயகர் கோவில் தெரு என 12–க்கும் மேற்பட்ட தெருக்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 3 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும் சிந்தாமணி தெரு, அப்பர் சுவாமி தெரு, வளையாபதி தெரு, கம்பராமாயணத்தெரு ஆகிய பகுதிகளில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் குடிதண்ணீர் கழிவு நீர் சாக்கடை கலந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அந்த பகுதி மக்கள் வண்ணார்பேட்டையில் காலிக்குடங்களுடனும், கலங்கிய குடிநீரை பாட்டிலில் பிடித்து வந்து பாட்டில்களுடனும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகராட்சி உதவி ஆணையாளர் சாந்தி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைதொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.