திருவொற்றியூரில் வீட்டை காலி செய்ய சொன்னதால் டிரைவர் தீக்குளித்து தற்கொலை

திருவொற்றியூர் காலடிப்பேட்டை புதுத்தெருவில் வசித்து வந்தவர் சந்திரன் (வயது 58).

Update: 2017-07-09 22:15 GMT

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் காலடிப்பேட்டை புதுத்தெருவில் வசித்து வந்தவர் சந்திரன் (வயது 58). கார் டிரைவர். இவருடைய மனைவி சரளா. சந்திரன் தங்கி இருக்கும் வீடு அவருடைய மனைவி சரளாவின் குடும்பத்துக்கு சொந்தமானது.

இந்தநிலையில் வீட்டை காலி செய்யுமாறு சரளாவின் தம்பி ராஜு கூறி வந்தார். இது தொடர்பாக கடந்த வாரம் போலீசிலும் புகார் அளித்தார். இதையடுத்து சந்திரனை போலீசார் அழைத்து எச்சரித்தனர்.

இதனால் மனவேதனை அடைந்த சந்திரன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த போது திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்