விழுப்புரம் ரெயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணி அமைச்சர் சி.வி.சண்முகம் ஆய்வு

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணியை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆய்வு செய்தார்.

Update: 2017-07-09 22:00 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் புதுச்சேரி சாலையில் உள்ள பழுதடைந்த ரெயில்வே மேம்பாலத்தை சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணியை நேற்று சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சி.வி.சண்முகம் கூறுகையில், விழுப்புரம் ரெயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறுகிய காலத்தில் பணியை செய்து முடிப்பதை என்பதை தவிர்த்து குறிப்பிட்ட காலகெடுவுக்குள் தரமான முறையில் பணியை செய்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மாவட்ட கலெக்டரும் அடிக்கடி மேம்பால பணியை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றார். பணியை நல்ல முறையில் முடிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

அதேபோல் காட்பாடி ரெயில்வே கேட் புதிய மேம்பால பணியும் முடிவடையும் நிலையில் உள்ளது. அதைத்தொடர்ந்து அங்கு சர்வீஸ் ரோடு (இணைப்பு சாலை) அமைக்கும் பணி முடிந்தவுடன் புதிய மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்